செய்திகள்

பானி புயல் எதிரொலி- ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு

ஒடிசாவை புரட்டி போட்ட பானி புயலின் கோரதாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், அம்மாநிலத்தில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #CycloneFani #NEETExamextended

மாலை மலர்

 ஒடிசாவின் புரி பகுதியில் நேற்று காலை 8.30க்கு கரையை கடக்க தொடங்கிய பானி புயல், 11 மணி அளவில் கரையை கடந்து, மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்தது. இந்த புயலில் சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.

கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. இதனால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.