செய்திகள்

பீகாரில் ‘நீட்’ கேள்வித்தாள் கசிவு: பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது

பீகாரில் ‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

நாடு முழுவதும் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக, கடுமையான கெடுபிடிகளுடன் ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.அதே நாளில், பீகார் மாநிலத்தில், இந்த தேர்வுக்கான கேள்வித்தாளை முன்கூட்டியே கசிய விட முயற்சித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் சில கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அங்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சந்தன்குமார் என்ற லாலு நேற்று முன்தினம் இரவு ஷேக்புரா கலெக்டர் அலுவலகம் முன்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய போலீஸ் டி.எஸ்.பி., அமித் சரண், “இந்த வழக்கில் பயிற்சி நிறுவன அதிபர் சந்தன்குமார் என்ற லாலு கைது செய்யப்பட்டதுடன், முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் ‘ஹார்டு டிஸ்கு’களும் கைப்பற்றப்பட்டன” என்று கூறினார்.