செய்திகள்

இந்திய கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும்: அனுராக் தாகூருக்கு கங்குலி டுவிட்

இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரான கங்குலி அனுராக் தாகூருக்கு டுவிட் செய்துள்ளார்.

மாலை மலர்

கங்குலிக்கு நேற்று பிறந்த நாள். அவருக்கு ரசிகர்கள் உள்பட முன்னணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பா.ஜனதா கட்சி சார்பில் இமாச்சல பிரதேசத்தில் எம்.பி.யாக இருக்கும் அனுராக் தாகூர், பிசிசிஐ தலைவராக இருந்தவர். இவர் கங்குலிக்கு டுவிட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த கங்குலி, ‘‘நீங்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும்’’ என்ற பதில் அளித்துள்ளார்.