செய்திகள்

தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இலங்கை அதிபர் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். #Tamilpoliticalissue #MaithripalaSirisena

கொழும்பு :

இலங்கை பாராளுமன்ற தொடக்க விழாவில் பேசிய மைத்ரிபாலா சிறிசேனா தமிழர்களின்  பிரச்சனைகளை ராணுவத்தின் மூலம் முடித்துவைத்தாலும் அதன் மூலக் காரணங்கள் அப்படியே உள்ளன. அவற்றை அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் போர்காலத்தின் போது கைப்பற்றப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான 85 சதவிகத நிலங்கள் அவர்களிடமே திருப்பி அளிக்கப்படன என குறிப்பிட்டுள்ளார். #Tamilpoliticalissue #MaithripalaSirisena

SCROLL FOR NEXT