செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அதன் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

மாலை மலர்

ஜனாதிபதி தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மராட்டியத்தை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அதன் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நேற்று மும்பை கார்வே கிளப்பில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் உயரிய முக்கியத்துவத்தை பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. சாதி, சமயம், இனம் மற்றும் மொழி வேறுபாடு இன்றி அனைவருக்கும் சம நீதி கிடைப்பதை நான் உறுதிசெய்வேன்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரிவான வளர்ச்சி தேவை. இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலும், கல்வித்துறையை நவீனமயமாக்குவதிலும் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தை காக்க எங்களால் முயன்ற அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஆனந்த் கீதே, மந்திரிகள் மகாதேவ் ஜன்கர், சுபாஷ் தேசாய் மற்றும் பாரதிய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே ஆகியோர் கலந்து கொண்டனர்.