செய்திகள்

போலீஸ் உளவாளி என நினைத்து கிராமத்தலைவரை கொன்ற நக்சலைட்டுகள்

சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் போலீஸ் உளவாளி என நினைத்து கிராமத்தலைவரை நக்சலைட்டுகள் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #naxals #chhattisgarh

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்பா கிராமத்தின் தலைவராக சோமரு ராம் மந்தாவி என்பவர் பதவி வகித்து வந்தார். நேற்று இரவு சில நக்சலைட்டுகள் சோமருவின் வீட்டிற்குள் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். சோமரு போலீஸ் உளவாளி என கூறி அவரை கோடாரி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த தலைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோமருவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராமத்தில் போலீஸ் உளவாளியாக செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் சோமரு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கிராமத்து தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #naxals #chhattisgarh #tamilnews

SCROLL FOR NEXT