ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜெக்காவரம் மற்றும் ஆரம்பள்ளி கிராமங்களில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நக்சல்கள் இருக்கும் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டான்.