கோப்பு படம் 
செய்திகள்

இந்திய கடற்படைக்கு 51 புதிய கப்பல்கள் வாங்கப்படும் - கடற்படை அதிகாரி பேட்டி

இந்திய கடற்படையில் 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக 51 புதிய கப்பல்கள் வாங்கப்படும் என கடற்படை அதிகாரி அட்மிரல் கே.ஜே.குமார் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழகம் - புதுச்சேரி கடற்படை அதிகாரி அட்மிரல் கே.ஜே.குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கடற்படையில் 120 கப்பல்கள் உள்ளன. கூடுதலாக 51 புதிய கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்படுகிறது. இதில் 49 கப்பல்கள் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

இந்திய கடற்படையில் ஒரு சில காரணங்களால் பெண்கள் சேர்க்கப்படவில்லை. தூத்துக்குடியில் கடற்படைக்கான தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.