வாலிபர் தற்கொலை 
செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளியை அடுத்த அதிபெரமனூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 27). அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தற்கொலை செய்ய முடிவு செய்து அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி அதில் இருந்த வயரை பிடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.