டெல்லியில் தனியார் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, பேருந்தினுள் 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிதாம்புராவில் உள்ள குடிசைப் பகுதியை சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.