சில ஆண்டுகளுக்கு முன் செயற்கைக்கோள் இணைய சேவை தொகுதிப்பிற்கு இந்தியா அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
தனது Gen 2 செயற்கைக்கோள் தொகுப்பிற்கு (constellation) ஒப்புதல் கோரி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திடம் (IN-SPACe) மீண்டும் விண்ணப்பித்துள்ளது.
இந்த புதிய அமைப்பு பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (LEO) 340-615 கி.மீ உயரத்தில் செயல்படும். மேலும், இது நேரடி-சாதன இணைப்பு (Direct-to-Device-D2D) வசதியை வழங்கும். இந்த வசதி போதிய சேவை கிடைக்காத சமூகங்களைச் சென்றடைவதற்கு மிக முக்கியமானது என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், மிகக் குறைந்த அளவே சேவை பெறும் மக்களுக்கு ஸ்டார்லிங்க் உதவும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 30,000 செயற்கைக்கோள்களை கொண்ட இணைய சேவை தொகுப்பை அமைப்பதற்காக எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை IN-SPACe நிராகரித்திருந்தது. சில தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) வரம்புகள் விதிமுறைகளுக்கு இணங்காததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
SpaceX நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க், உலகின் மிகப்பெரிய LEO செயற்கைக்கோள் சேவை நிறுவனமாகும். இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சந்தை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பெரும் ஆற்றலை கொண்டுள்ளது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இச்சந்தையில் ஸ்டார்லிங்க் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இந்நிறுவனம் முதலில் இந்தியாவில் சேவையைத் தொடங்க 'Gen 1' மற்றும் 'Gen 2' ஆகிய இரு தொகுப்புகளுக்கும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் 4,408 LEO செயற்கைக்கோள்களைக் கொண்ட 'Gen 1' தொகுப்பிற்கு மட்டுமே IN-SPACe ஒப்புதல் அளித்தது.ன்று வலியுறுத்தியுள்ளன.