இந்தியா

ஞானேஷ் குமாருக்கு Z பிளஸ் பாதுகாப்பு- மத்திய அமைச்சகம்

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எஸ்ஐஆர் முறைகேட்டை கண்டித்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலின் "சிறப்பு தீவிர திருத்தம்" (Special Intensive Revision - SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞானேஷ் குமாருக்கு மத்திய ஆயுதக் காவல் படையினர் (CAPF) மற்றும் டெல்லி போலீசார் என மொத்தம் 55 பாதுகாப்பு அதிகாரிகள் சுழற்சி முறையில் 24 மணிநேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள அவரது இல்லம், தேர்தல் ஆணையத் தலைமையகம் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவிலும் கூடுதல் ஆயுதப்படையினர் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT