படுகாயத்துடன் ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவரை மீட்டு லாலாலஜ்பத்ராய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
கொலை செய்வதே கொடூரம். அதிலும் சித்ரவதை செய்து அனுபவித்து மகிழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரு சிங் பவுதரியா (37). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுதரியா தசரா கண்காட்சியை பார்த்து விட்டு ஒரு காரில் வீடு திரும்பி இருக்கிறார்.
அனுமந்த் விகார் பகுதியில் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற எதிராளிகள் அவரது காரில் மோதி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து காருக்குள் இருந்த பவுதரியாவை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து தங்கள் காரின் கூரையின் மீது ஏறச் செய்துள்ளார்கள். பின்னர் அவரது 2 கைகளையும் கார் கதவுகளுக்குள் சிக்க வைத்தபடி காரை கிளப்பி இருக்கிறார்கள்.
அதிவேகமாக சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி சென்றுள்ளார்கள். கதவுகளுக்குள் கைகள் சிக்கியதால் பலத்த காயத்துடன் பவுதரியா உயிர் பிழைக்க போராடி இருக்கிறார். ஆனாலும் அந்த குழு அவரை விடவில்லை.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தின் போது பவுதரியா சத்தம் போட்டு கதறி இருக்கிறார். ஆனாலும் விடவில்லை. பின்னர் சாலையில் அவரை தூக்கி வீசி விட்டு காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.
படுகாயத்துடன் ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவரை மீட்டு லாலாலஜ்பத்ராய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
கான்பூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். வாலிபர் பவுதரியா கொடூரமாக காரில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.