43வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் 
இந்தியா

43வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. உடல் இரண்டாக பிளந்து உயிரிழப்பு

பணப் பிரச்சினை, திருமண வாழ்க்கை மற்றும் ஒரு வயது மகனின் உடல்நலப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆடம்பர ஹோட்டலின் 43வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 94-ல் உள்ள சூப்பர் நோவா சொசைட்டி கட்டிடத்தின் உச்சியான 43வது மாடியில் இருந்து சம்பவ் ஜெயின் 28 வயது இளைஞர் குதித்துள்ளார்.

குருகிராமில் உள்ள மனேசரை சேர்ந்த அவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த கட்டிடத்தில் உள்ள ஓர் அறையில் ஹோம் ஸ்டே முறையில் தங்கி இருந்த அவர் நேற்று காலை இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கீழே விழுந்த வேகத்தில் அந்த இளைஞரின் உடல் இரண்டாகப் பிளந்தது. இதன் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கீழே கூடியிருந்தவர்களில் சிலர் இந்தச் சம்பவத்தை வீடியோவில் பதிவுசெய்துள்ளனர்.

சம்பவ் நான்கு நாட்களாகக் காணாமல் போயிருந்ததாகவும், அவரது தந்தையுடனான உரையாடல்கள் தங்களுக்குக் கிடைத்ததாகவும் குடும்பத்தினர் கூறியதாக காவல்துறை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதும், பணப் பிரச்சினை, திருமண வாழ்க்கை மற்றும் ஒரு வயது மகனின் உடல்நலப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

விசாரணை

காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று பரிசோதனை நடத்தினர்.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிற

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

SCROLL FOR NEXT