இந்தியா

ஆன்லைனில் ஆர்டர் செய்து ஷவர்மா சாப்பிட்ட வாலிபர் பலி

ராகுல் டி.நாயர் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தீக்கோயி பகுதியை சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (வயது 22). இவா் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18-ந்தேதி ராகுல் மாவேலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஷவர்மா (இறைச்சி உணவு) ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

மறுநாள் காலையில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT