வாக்கு திருட்டுக்கு எதிராகவும் மற்றும் ஞானேஷ் குமார் பதவி விலக்கோரியும் கடந்த 1-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 10 லட்சம் பேரை கூட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் தலைவர் தொண்டர்களை அழைத்து வர கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்திய இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இளைஞர் காங்கிரஸ்க்கான பிரத்யேக செயலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பேரணிக்கு முன்னதாக அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில், பார்கோடு ஸ்கேனர் மற்றும் டிஜிட்டல் பதிவு மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
ஆனால் குறைவான நபர்களை வந்ததாகவே டிஜிட்டல் பதிவேடு மூலம் தெரிய வந்தது. ஆனால், 15 ஆயிரம் பேர் வந்ததாகவும், அங்கு இணைய தளம் வசதி கிடைக்காததால் ஸ்கேன் செய்ய முடியவில்லை என்று பலர் கூடினர். இதனால் 2831 பேர் மட்டுமே ரிஜிஸ்டர் செய்திருந்தனர்.
ஆனால், சரியான முறையில் மானிட்டர் செய்ததில் 50-க்கும் மேற்பட்டோர் பேரணிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு எதிராக சஸ்பெண்ட் நடவடிக்கையை இளைஞர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை 500-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக பாயும் எனத் தெரிகிறது.