இந்தியா

கண்ணடித்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்- நடுரோட்டில் நடந்த சம்பவ வீடியோ வைரல்

இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் காமரேட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை பார்த்து கண்ணடித்தார். அநாகரீகமாகவும் நடந்து கொண்டார். உடனே ஆவேசமடைந்த இளம்பெண் அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

மேலும் சாலையிலேயே அந்த வாலிபரை விரட்டி விரட்டி தாக்கினார். விடாமல் கைகளால் தாக்கி புரட்டி எடுத்தார். அத்துடன் நிற்காமல், வாலிபரை அடித்துக் கொண்டே இழுத்து சென்று போலீசில் ஒப்படைத்தார். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.