விசாரணை நடத்தியதில் காதலனை ஜாமினில் எடுக்க போதை பொருள் கடத்தியதாக தெரிவித்தார்.இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நாக சவுமியாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், படமட்டாவை சேர்ந்தவர் நாக சவுமியா. இவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. மேலும் சிலருக்கு போதை பொருள் விநியோகித்து வந்தார்.
இவரது காதலன் காசிவர்தன். கடந்த 3 மாதத்திற்கு முன்பு சித்தூரில் போதை விநியோகம் செய்யும்போது போலீசார் காசிவர்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். காதலனை ஜாமீனில் எடுக்க நாக சவுமியாவிடம் பணம் இல்லை.
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு காதலனை ஜாமீனில் எடுக்க முடிவு செய்தார். கிருஷ்ணலங்காவை சேர்ந்த போதை பொருள் வியாபாரியான பஷீர் என்பவரை சந்தித்தார். அவர் பெங்களூரில் இருந்து மைத்திலின் டயாக்ஸி மெத்த பெட்டமைன் கடத்தி வந்தால் ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்தார். மேலும் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட நாக சவுமியா கடந்த 13-ந் தேதி பெங்களூர் யெல ஹங்காவுக்கு சென்றார். அங்கு போதைப் பொருள் வியாபாரி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் நாக சவுமியாவிடம் 110 கிராம் எடையுள்ள எம்.எம்.டி.ஏவை கொடுத்தார். போதை பொருளை பெற்றுக்கொண்ட அவர் பெங்களூரில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் விஜயவாடாக்கு புறப்பட்டு வந்தார்.ரெயிலில் போதைப் பொருள் கடத்தி வருவதாக ஈகிள் இன்ஸ்பெக்டர் ரவீந்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விஜயவாடா வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் நாக சவுமியாவை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர் போதை பொருள் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் காதலனை ஜாமினில் எடுக்க போதை பொருள் கடத்தியதாக தெரிவித்தார்.இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நாக சவுமியாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.