இந்தியா

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

அபிநய், வம்சி இருவரின் வீடுகள் தொலைதூரத்தில் இருந்ததால் இளம்பெண்ணின் வீட்டிலேயே இரவு தங்கினர். நள்ளிரவு நேரம் இளம்பெண் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பிலிம் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் என்பதால் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான அபிநய், வம்சி இருவரையும் வீட்டிற்கு அழைத்தார்.

வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு 3 பேரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்தனர்.

அபிநய், வம்சி இருவரின் வீடுகள் தொலைதூரத்தில் இருந்ததால் இளம்பெண்ணின் வீட்டிலேயே இரவு தங்கினர். நள்ளிரவு நேரம் இளம்பெண் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அப்போது மது போதையில் இருந்த அபிநய் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த 21-ந்தேதி மீண்டும் இளம்பெண் வீட்டிற்கு வந்த அபிநய் அவரை மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து தனது நண்பர் வம்சியிடம் தெரிவித்தார்.

கடந்த 23-ந்தேதி வம்சியும், அபிநயும் இளம்பெண் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுகுறித்து இளம்பெண் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT