பணத்தை திருடுவதற்கு முன்பு இனிப்பு வகைகளை சாப்பிட்டார். வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்களை எடுத்துக் கொண்டார்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், துனியில் ஸ்வீட் கடை உள்ளது. நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றார்.
அவருக்கு அங்கிருந்த வகை வகையான ஸ்வீட்களை கண்டதும் அவற்றை சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது. பணத்தை திருடுவதற்கு முன்பு இனிப்பு வகைகளை சாப்பிட்டார். வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்களை எடுத்துக் கொண்டார்.
பின்னர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றார். வாலிபர் கடைக்குள் நுழைவது இனிப்புகளை ருசித்து சாப்பிட்டதும் முதல் வெளியேறுவது வரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.