யோகி ஆதித்யநாத் யோகி ஆதித்யநாத்
இந்தியா

தீபாவளி சமயத்தில் மோசமாகும் காற்றை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அது தானாகவே சரியாகும் - யோகி ஆதித்யநாத்

தீபாவளியைக் கொண்டாடியது நல்லது. ஏராளமான மக்கள் பட்டாசுகளை வெடித்தது மகிழ்ச்சியளித்தது.

அயோத்தியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் தாம் தனிப்பட்ட முறையில் பங்கேற்றதாகவும், மாசுபாடு குறித்த கவலைகள் ஒருதலைப்பட்சமாக எழுப்பப்படுவதாகவும் வாதிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதை நேற்று (புதன்கிழமை) நியாயப்படுத்தினார்.

லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், "தீபாவளி கொண்டாட்டங்களால் மாசுபாடு ஏற்பட்டதாக பலர் கூறினர். மாசுபாடு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதுவும் முடிவுக்கு வரும் என்று நான் கூறினேன். அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

பட்டாசுகளால் ஏற்படும் எந்தவொரு மாசுபாடும் தற்காலிகமானது, அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. மக்கள் "தூம் தாரகா"வுடன் தீபாவளியைக் கொண்டாடியது நல்லது. ஏராளமான மக்கள் பட்டாசுகளை வெடித்தது மகிழ்ச்சியளித்தது," என்று கூறினார்.

நிலைமை மாறியுள்ளது:

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்ற தனது அரசின் நிலைப்பாட்டை யோகி மீண்டும் வலியுறுத்தினார். மேலும், பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது தான் அயோத்தியில் இருந்ததாகவும் கூறினார். இந்த ஆண்டு பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சர், முன்பு பண்டிகைகளுக்கு முன்னதாக கலவரங்களும் ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டதாகவும், அவை சந்தைகளையும் பொதுப் பாதுகாப்பையும் பாதித்ததாகவும் கூறினார்.

கடந்த 9.5 ஆண்டுகளாக எந்த ஊரடங்கும், போராட்டமும் நடைபெறவில்லை என்றும், உத்தர பிரதேசத்தில் நிலைமை மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT