யோகி ஆதித்யநாத்
இந்தியா

1.27 கோடி இந்து வாக்காளர்கள் பெயர் நீக்கமா?- யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் அதிகாரி பதில்

ஜாதி அல்லது மதம் அடிப்படையில் தரவுகள் பராமரிக்கப்படாது.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற SIR மூலம் 1.27 கோடி இந்து வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் மிஸ்சிங் ஆவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

அரசு நலத்திட்டங்கள் பெற்று வந்த 55 லட்சம் பேர் பெயர் இல்லை

இதில் அரசு நலத்திட்டங்களை பெற்று வந்த 55 லட்சம் பேர் பெயர்கள் இல்லை. அத்துடன் 18 வயது முதல் 19 வயதிலான 4.5 லட்சம் இளைஞர்கள் பெயர்களும் இல்லை. எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா, தேர்தல் ஆணையத்தில் வாக்காளர்களின் மதம் அல்லது ஜாதி அடிப்படையில் தரவுகள் பராமரிப்பதில்லை. அதேபோல் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பெயர், தந்தை பெயர், வீட்டு எண் இடம் பெற்றிருக்கும்

வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்களின் பெயர், தந்தை பெயர் அல்லது தம்பதியின் பெயர், வயது, வீட்டு எண், பாலினம் போன்ற அடையாளங்கள்தான் அடங்கியிருக்கும். டேட்டா தரவுகளில் மதம் மற்றும் ஜாதி போன்றவை சேர்க்கப்பட்டிருக்காது.

பொதுவெளியில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர், மற்ற தகவல்கள் வைத்து வாக்காளரின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஜாதி, மதம் அடிப்படையில் வாக்காளர்களை கண்டறிய முடியாது என்றார்.

SCROLL FOR NEXT