இந்தியா

யமுனையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட டெல்லி முதல்வர்

யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள 28 முக்கிய படித்துறைகளையும் தூய்மையாக வைத்து கொள்ள டெல்லி அரசு பிரச்சாரம் மேற்கொண்டது.

‘மா யமுனா’ திட்டம் தொடக்கம்:

யமுனா நதியின் ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் தூய்மை இயக்கமான ‘மா யமுனா’ திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று தொடங்கி வைத்தார்.

யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள 28 முக்கிய படித்துறைகளையும் தூய்மையாக வைத்து கொள்ள டெல்லி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வில் மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு யமுனை நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களை வலியுறுத்தினர்.

28 படித்துறைகளிலும் கார்த்திகை மாதம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கணு பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விளக்குகளை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

யமுனையை தூய்மையாக வைக்க டெல்லி முதல்வர் வேண்டுகோள்:

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர், “யமுனா நதியை சுத்தம் செய்யும் பணி காலை 6 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் நூற்றுக்கணக்கான டன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சற்று சிந்தித்துப் பாருங்கள், இங்கு வீட்டு சடங்குப் பொருட்களைக் கரைப்பதன் மூலம், நாம் உண்மையில் எந்த தெய்வத்தை மகிழ்விக்கிறோம்? யமுனா மாசுபட்டால், எந்த தெய்வமும் மகிழாது.

யமுனா நதியில் எந்த விதமான கழிவுகளும் கொட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அரசு தனது கடமைகளை முழு கவனத்துடன் நிறைவேற்றும், குடிமக்களாகிய நாமும் நமது பொறுப்புகளை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.