இந்தியா

விமானத்தை தவறாக அனுப்பிய Air India: 4 மணி நேர பயணத்திற்குப் பிறகு டெல்லி திரும்பிய சம்பவம்

ஒரு விமானத்திற்குப் பதிலாக இன்னொரு விமானத்தை தவறாக இயக்கியதை கண்டுபிடித்து ஏர் இந்தியா, அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளது

மாலை மலர்

டெல்லியில் இருந்து கனடாவிற்கு இன்று காலை 11.34 மணிக்கு ஏர்இந்தியா (AI185) போயிங் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் 777-200LR என்ற நம்பரை கொண்டது. ஆனால் இந்த விமானத்தை கனடாவிற்கு இயக்க ஏர் இந்தியா அனுமதி பெறவில்லை. 777-300ER என்ற விமானத்தை இயக்குவதற்குதான் அனுமதி பெற்றிருந்தது.

ஆனால் 777-200LR விமானம் 4 மணி நேரம் பறந்த பிறகு, சீனா வான்பகுதியில் குன்மிங் என்ற இடத்திற்கு அருகே சென்ற பிறகுதான், அனுமதி பெறாத விமானம் பறந்து சென்று கொண்டிருப்பதை ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக விமானிக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான மீண்டும் டெல்லிக்கு விமானத்தை திருப்பினார். டெல்லியில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

சுமார் 9 மணி நேரம் பயணிகள் விமானத்தில் பறந்து சென்று மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளனர். அதைவிட அனுமதி பெறாத விமானத்தை ஏர்இந்தியா எப்படி இயக்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது.