இந்தியா

ரெயில்-நடைமேடை இடையே சிக்கிய பெண் மீட்பு

ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்தார்.

பாதுகாப்பு பணயில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு துறை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஹரித்வால், காவலர்கள் பிரவேஷ் குமார் மற்றும் பசந்த் ஆகியோர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அவசரகால சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-ஆம் நடைமேடையில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்தார்.

ரெயில்வே பாதுகாப்பு

அங்கு பாதுகாப்பு பணயில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு துறை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஹரித்வால், காவலர்கள் பிரவேஷ் குமார் மற்றும் பசந்த் ஆகியோர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அவசரகால சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

சமூக வலைதளம்

பின்னர், அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மீட்புப் பணிகள் சுமார் 5 நிமிடங்களில் நிறைவடைந்தன. ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தைக் கண்ட பணியாளர்கள் நொடிப்பொழுதில் செயல்பட்டு, அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதை அந்தக் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT