சீதாராமராஜு, லலிதாகுமாரி 
இந்தியா

நடத்தையில் சந்தேகம்- பெண் என்ஜினீயர் அடித்துக் கொலை

போலீசார் சீதாராம ராஜுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

சீதாராம ராஜுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்டு தந்தை ஜெயிலுக்கு சென்றதால் அவர்களது 2 பிள்ளைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம விஜயநகரம் மாவட்டம் ராஜம் நகர பகுதியை சேர்ந்தவர் சீதாரா மராஜு. இவர் அதே பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதா குமாரி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

படிக்க வைத்த கணவர்

திருமணத்திற்கு பிறகும் லலிதா குமாரி என்ஜினீயரிங் படிக்க விரும்பினார். அவரை கணவர் என்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பு முடித்த பிறகு லலிதா குமாரிக்கு கல்லூரியில் பேராசிரியை வேலை கிடைத்தது.

கடந்த 2017-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் என்ஜினீயர் வேலை கிடைத்தது. லலிதா குமாரி வேலை சம்பந்தமாக செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்பார். வேலையில் இருந்து வீட்டிற்கு தாமதமாக வந்தார்.

தகராறு

இதனால் சீதாராம ராஜுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கணவர் அடிக்கடி தகராறு செய்வதால் மன நிம்மதிக்காக லலிதா குமாரி யோகா வகுப்புக்கு சென்று வந்தார். இதற்கிடையே மனைவியை கொலை செய்ய சீதாராமராஜு திட்டமிட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் யோகா வகுப்பிற்கு செல்ல தயாரானார்.

அப்போது சீதாராமராஜு தனக்கு அப்பகுதியில் வேலை உள்ளது அதனால் நானே என்னுடைய பைக்கில் உன்னை இறக்கி விடுகிறேன் என தெரிவித்தார்.

கொலை

நான் என்னுடைய மன நிம்மதிக்காக யோகா வகுப்பிற்கு செல்கிறேன் நீங்கள் அங்கு வந்து தகராறு செய்ய வேண்டாம் என தெரிவித்தார். நான் உன்னிடம் எதுவுமே பேச மாட்டேன். உன்னிடம் தகராறு எதுவும் செய்ய மாட்டேன் என கூறி வலு கட்டாயமாக மனைவியை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றார்.

புறநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பைக்கை நிறுத்தினார். இதனைக் கண்ட லலிதா குமாரி ஏன் இங்கு பைக்கை நிறுத்தினீர்கள் என கேட்டார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டப்படி முள் புதரில் பதுக்கி வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லலிதா குமாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

விபத்து நாடகம்

சாலையில் உடலை வீசி விட்டு செல்போனை அருகில் வைத்தார். தனது மனைவி விபத்தில் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். தலை மற்றும் முகம் முழுவதும் பலத்த காயம் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார்

போலீசார் சீதாராம ராஜுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சீதாராம ராஜுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்டு தந்தை ஜெயிலுக்கு சென்றதால் அவர்களது 2 பிள்ளைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT