இந்தியா

வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை- நிர்வாணமாக கட்டி போட்டு விட்டு மர்மநபர் ஓட்டம்

தனக்கு நடந்த கொடுமையை குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

ஆந்திர மாநிலம் சட்டெனப்பள்ளியை சேர்ந்த 32 வயது பெண். கணவரை பிரிந்த இவர் தனது வேலை காரணமாக மச்செர்லாவில் தனியாக வசித்து வருகிறார். மேலும் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்துள்ளார்.

நேற்று புனித வெள்ளியையொட்டி சட்டெனப்பள்ளிக்கு செல்ல அவர் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரது வீட்டு கதவைத் தட்டினார்.

அவர் கதவைத் திறந்தவுடன் மர்ம நபர் அவரை உள்ளே தள்ளிவிட்டு பூட்டினார். பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர், பெண்ணை நிர்வாணமாக்கி கை, கால்களை கட்டி போட்டார். மேலும் அவரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டனர். தனக்கு நடந்த கொடுமையை குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன் மூலம் மர்மநபரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.