டெல்லி மெட்ரோ ரெயிலில் சர்ச்சையான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மெட்ரோவில் அத்துமீறிய பயணிகள், அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த பயணிகள்.
ஜோடிகளின் முத்தமழை, பயணிகள் இடையே சண்டை என பல வீடியோக்கள் வைரலாகி இருந்த நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு ஆணின் மடியில் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக அமரும் காட்சிகள் உள்ளது.
கருப்பு உடை அணிந்த அந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. அப்போது யாரும் தனக்கு இருக்கை வழங்காத நிலையில், அந்த பெண் ஒரு வாலிபரிடம் தனக்கு அமர இருக்கை தருமாறு கேட்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுத்தார். உடனே அந்த பெண் வாலிபரின் மடியில் அமர்ந்து கொள்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.