உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று 24 வயது இளம் பெண் ஒருவர், கால்நடைகளுக்கு தீவினம் சேகரிக்க வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரிய 3 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். திடீரென அவரை 4 பேரும் பிடித்து, காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு மயக்கம் வரும் வகையில் ஏதோ போதைப்பொருள் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 4 பேரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை, அங்கேயே அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.
வயல்வெளிக்குச் சென்ற மகள் திரும்பி வராததால், தேடிச் சென்றனர். அப்போது மகள் காட்டுப் பகுதியில் மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அளித்தனர். பின்னர் மயக்கம் தெளிந்தபின், அந்த பெண் தனக்கு நேர்ந்த அவல நிலையை விவரித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர். சிகிச்சைக்காக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.