சமையல் அறையில் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக ரெடிட் வலைதள பக்கத்தில் ஒரு பயனரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், எனது அம்மா தற்செயலாக அவரது ஆப்பிள் ஐ-பேடை அடுப்பில் வைத்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த ஐ-பேடு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகி இருக்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டனர்.