இந்தியா

பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டு.. முன்னிலை நிலவரம் போலி - வீடியோ வெளியிட்ட மம்தா

14 முதல் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த நிலைமை மாறும்

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணப்படும் 293 தொகுதிகளில் 191 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் பிற்பகல் இது தொடர்பாக காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்ட மம்தா பானர்ஜி, "வாக்கு எண்ணிக்கை மையங்களை விட்டு வெளியேறாதீர்கள். அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெறும்.

சுமார் 100 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் இன்னும் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் நிலவரத்தை பாஜகவும் தேர்தல் ஆணையமும் காட்டவில்லை. வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் போலியானவை. 14 முதல் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த நிலைமை மாறும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.