இந்தியா

கடந்த 6 மாதத்தில் 60,000 சிறார் பிரசவங்கள்: அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரிக்கை

சிறார் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு அரசு நலத்திட்டம் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பீகாரில் குழந்தை திருமணம் செய்து கொள்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் திரும்ப பெறப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 18 வயது குறைந்த சிறுமிகளுக்கு சுமார் 60,000 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெற்றதாக மாநில சுகாதார துறை ஒரு அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் நபான்னாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.

குழந்தை திருமணத்தில் முதலிடம்

அப்போது அவர் கூறுகையில், “ஆறு மாத காலப்பகுதியில், முர்ஷிதாபாத்தில் 12,847 சிறுமிகள் மருத்துவமனைகளில் பிரசவித்ததன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தெற்கு பர்கானாஸ் பகுதி 4,178 வழக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் குழந்தை திருமணங்கள் மற்றும் பிரசவங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

18 வயதுக்குட்பட்ட சிறுமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கர்ப்பம் மற்றும் பிரசவ வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் சுகாதாரப் பதிவேடுகளைப் பயன்படுத்துவார்கள்.

வயது சரிபார்க்கப்படும்

சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் கணவர்களுக்கு விளக்கம் கோரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டு, மனைவியின் வயதுக்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

வயதுக்கான சரியான ஆதாரத்தை அவர்கள் வழங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது கண்டறியப்படும் வழக்குகளில், காவல்துறை குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்கி, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

குழந்தை திருமணங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து நலத்திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களின் பலன்கள் திரும்பப் பெறப்படும்.

சிறுவர் திருமணங்களை நடத்தி வைக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் மதகுருக்கள் மற்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

கடுமையான போக்சோ சட்டம்

மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன், அவர் திருமணமானவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய சுவேந்து அதிகாரி, போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடல் உறவு கொள்வது போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும், அதற்கான சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சில சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சிறார் கர்ப்பம் தொடர்பான வழக்குகள் குறிப்பாகக் கடுமையான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறினார்.

SCROLL FOR NEXT