இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் மகளிருக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் அமல்.. இமாம்கள் சம்பளம் ரத்து!

முஸ்லிம் சமூக பிரிவுகளை இணைத்து தயாரிக்கப்பட்ட ஓபிசி வகுப்பு பட்டியலை கைவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி 200 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வர் பதவியேற்றார்.

சுவேந்து அதிகாரி பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நேற்று அமைச்சவரை கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் மம்தா அரசின் முஸ்லிம் சமூக பிரிவுகளை இணைத்து தயாரிக்கப்பட்ட ஓபிசி வகுப்பு பட்டியலை கைவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த ஆட்சியில் இமாம்கள், கோவில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதிய சம்பளத்தை நிறுத்த சுவேந்து அதிகாரி அரசு முடிவெடுத்துள்ளது.

நலத்திட்டங்கள் ஆனது, மத அடையாளங்களின் அடிப்படையில் இருக்க கூடாது என்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

பெண்கள் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், மதிப்பூதியம் ரத்து உள்ளிட்டவை ஜூன் 1 முதல் மாநிலத்தில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் அக்னிமித்ரா பவுல் தெரிவித்துள்ளார்.