இந்தியா

மேற்கு வங்கம்: பவானிப்பூரில் சுவேந்துவிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற மம்தா - SIR காரணமா?

கடந்த முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவருக்கு இது மிகப்பெரிய சரிவாகும்.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகாலம் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரசின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. பாஜக 208 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

11-வது சுற்று வரை முன்னிலையில் இருந்த மம்தா, கடைசி கட்டத்தில் சுவேந்து அதிகாரியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். கடந்த முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவருக்கு இது மிகப்பெரிய சரிவாகும்.

திரிணாமுல் காங்கிரஸ் நம்பியிருந்த சிறுபான்மையின வாக்குகள் பிரிந்து சென்றது அவர்களுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 87 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது, மறுபரிசீலனைக்கு தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து காத்திருக்கும் 34 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது ஆகியவை மம்தா அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.

எஸ்ஐஆரில் ஏறத்தாழ 47,000 பேர் பவானிபூர் தொகுதியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.