மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஃபால்டா தொகுதிக்கு நடந்த மறுதேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷூ பாண்டா வெற்றிபெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், CPM வேட்பாளர் 40,645 வாக்குகளுடன் 2வது இடமும், காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.
தேர்தலில் இருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் தன்னிட்சையாக அறிவித்த நிலையில் 7,783 வாக்குகளை மட்டுமே பெற்று 4வது இடத்தை பிடித்தது எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி அன்று நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது நடந்த முறைகேடுகள் காரணமாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதிக்கு தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது.
புதிய அறிவிப்பின்படி ஃபால்டா தொகுதிக்கு மே 21 அன்று மறுதேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தின் மற்ற 293 தொகுதிகளுக்கும் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஃபால்டா தொகுதிக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.