இந்தியா

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல்: மம்தாவுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம்

வரும் 29-ந்தேதி இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதன்படி, முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

வரலாறு காணாத வகையில் மேற்கு வங்கத்தில் 92 சதவீத வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து, வரும் 29-ந்தேதி இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

மேற்கு வங்க மாநில உரிமையை வலுப்படுத்த மம்தா பானர்ஜிக்கு வாக்களிக்க வேண்டும் என கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

SCROLL FOR NEXT