இந்தியா

மேற்காசிய போர் - அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்பதற்றம், அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க நாளைக் கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்

மாலை மலர்

மேற்காசியப் போர் மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விவாதிக்க நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்பதற்றம், எரிசக்தி பாதுகாப்பு, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் காரணமாக இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் மற்றும் டிஆர்டிஓ தலைவர் சமீர் காமத் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்தே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.