வடமேற்கு டெல்லியில் உள்ள கிராரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வாட்ஸ். அவர் மக்களை சந்தித்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினார். அப்போது டவுசர் மற்றும் பனியனை அணிந்து கொண்டு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மனுக்களை கையெழுத்திட்டு உதவியாளரிடம் வழங்குவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் செயல்பாடு வெட்கக்கேடானது. உங்களிடம் பெண்கள் கையெழுத்திற்காக வரும்போது, நீங்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.
அதேவேளையில் அந்த எம்.எல்.ஏ. "நான் ஏதேனும் தவறான சைகைகளைச் செய்திருந்தால், அதற்கான காணொளியை அவர் காட்ட வேண்டும். மக்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இல்லை. அதனால்தான் அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்." என்றார்.