பெங்களூருவில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான கழிவு மேலாண்மை தொடர்பான ஒப்பந்தத்தை ராம்கி குரூப் உடன் தொடர்புடைய எம்.எஸ்.டபிள்யூ. சொல்யூசன்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.
30 வருடத்திற்கான ஒப்பந்தம் 5 வருடம் நீட்டிக்கப்பட்டு 35 வருடங்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 35 வருடத்திற்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் கர்நாடக மாநில அரசு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆர். அசோக் கூறியதாவது:-
கழிவுகளை சேகரிப்பதற்கும், அதை கொண்டு செல்வதற்கும் (transportation) வருடத்திற்கு 514 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. கழிவு அப்புறப்படுத்துதல் போன்றவற்றிற்கு 380 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 11 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு 444 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 1344 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கழிவு மேலாண்மை செயலை கையாண்டு வந்தனர். டெல்லியை சேர்ந்த நிறுவனத்திற்கு 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமும் அடங்கும். அரசுக்கு சொநத்மான RITES-யின் நிபுணர்கள் கருத்து நிராகிரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாக ஆலோசனை நிறுவனத்திடம் இருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் ரூ. 1,500 கோடி மதிப்பிலான கடன்களைத் திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்திற்காக அரசு நிலமும் வழங்கப்பட்டுள்ளது.