தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை முடியவில்லை, யாருக்கும் அது தெரியாது. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, "காங்கிரஸ் மீண்டும் ராணுவத்தையும் விமானப்படையையும் கேள்வி எழுப்பியுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தான் நம்பவில்லை என்றும், தனக்கு ஆதாரம் வேண்டும் என்றும் சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் கூறியுள்ளார்.
ராணுவமும் விமானப்படையும் பொய் சொல்வதாகவும், பாகிஸ்தான் உண்மையைச் சொல்கிறது என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் காங்கிரசும் ராகுல் காந்தி குடும்பத்தினரும் என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானே கூறிய போதிலும் இவ்வாறு கூறுகிறார்கள். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால், ராகுல் காந்தியுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்" என்று தெரிவித்தார்.
மேலும், சரஞ்சித் சிங் சன்னி பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து பாதுகாக்கிறது. இப்போது சரண்ஜீத் சிங் சன்னி நமது ராணுவத்தை கேள்வி கேட்கிறார். இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் ஏன் நமது ராணுவத்தை மனச்சோர்வடையச் செய்கிறது. காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானிடமிருந்து உத்தரவுகளைப் பெறுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
SICK!Rahul Gandhi's Congress continues to defend Pakistani terror!Now Charanjeet Singh Channi questions our forces.Why is Congress demoralising our forces at this critical time.Congress is taking orders directly from Pakistan!#PehalgamTerroristAttack pic.twitter.com/b2MIexdAQA