இந்தியா

திருப்பதியில் 5 நாட்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதியில் நேற்று 84, 171 பேர் தரிசனம் செய்தனர். 36, 671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நாளை முதல் 4-ந் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழா தொடக்கம் முதலே திருப்பதி மலையில் பக்தர்களின் கூட்டம் தொடர்ச்சியாக குறையாமல் உள்ளது. தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மீதமுள்ள 30 ஆயிரம் பக்தர்கள் மறுநாள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பக்தர்கள்

எனவே சாதாரண பக்தர்களும் சிரமம் இன்றி விரைந்து தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வி.ஐ‌.பி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நாளை முதல் 4-ந் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம்

திருப்பதியில் நேற்று 84, 171 பேர் தரிசனம் செய்தனர். 36, 671 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.16 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT