இந்தியா

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது பயங்கர கலவரம்

மனுதாக்கல் செய்ய வந்த 2 கட்சி தொண்டர்களும் கற்களை வீசியும், தடிகளால் தாக்கி கொண்டனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே திருப்பதி, புங்கனூர், ராய்ச்சோட்டி, தர்மாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

நகராட்சி

புங்கனூர் நகராட்சி வேட்புமனு தாக்கல் அங்குள்ள பள்ளியில் நடந்தது. நேற்று மனுதாக்கல் செய்ய வந்த 2 கட்சி தொண்டர்களும் கற்களை வீசியும், தடிகளால் தாக்கி கொண்டனர்.

இதில் ஏராளமான தொண்டர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டுள்ளனர். வன்முறையின் போது கார்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பல கார்கள் புரட்டிப் போடப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்திருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT