விஜய்பத் சிங்கானியா 
இந்தியா

Raymond குழுமத்தின் முன்னாள் தலைவர் விஜய்பத் சிங்கானியா காலமானார்

இந்தியாவின் முன்னணி ஆடை, ஜவுளி நிறுவனங்களில் ஒன்று ரேமண்ட் குழுமம்.

இந்தியாவின் முன்னணி ஆடை, ஜவுளி நிறுவனங்களில் ஒன்று ரேமண்ட் குழுமம். இது உயர்தர சூட்டிங் துணிகள், பார்க் அவென்யூ மற்றும் கலர் பிளஸ் போன்ற பிராண்டுகளுக்கு பெயர் பெற்றது.

இந்நிலையில், ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87), நேற்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இந்தத் தகவலை அவரது மகனும், ரேமண்ட் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா, எக்ஸ் தளத்தில், RIP - ஓம் சாந்தி என்ற சுருக்கமான அஞ்சலியுடன் இந்தச் செய்தியை பதிவிட்டுள்ளார்.