இந்தியா

VIDEO: "பயங்கரவாதியே.. உனக்கு வெட்கமாக இல்லையா.." இஸ்லாமிய மாணவனை திட்டிய பேராசிரியர்

பயங்கரவாதி. இன்று இங்கே அமைதியாக இருக்கும் என்று நினைத்தேன்.

பெங்களூருவில் பிரபல தனியார் பல்கலைக்கழகமான PES பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, பேராசிரியராக பணியாற்றி வரும் முரளிதர் தேஷ்பாண்டே கடந்த மார்ச் 24 அன்று வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு முஸ்லீம் மாணவனை நோக்கி, "வகுப்பு நடந்துகொண்டிருக்கும் நீ தொந்தரவு செய்கிறாய். இன்று இங்கே அமைதியாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்கு வெட்கமாக இல்லையா.. உருப்படாதவனே (Useless fellow), பயங்கரவாதி, உன்னை நான் பயங்கரவாதி என்றுதான் அழைப்பேன்!" என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தங்களது செல்போனில் இதை வீடியோ எடுத்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகள் திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.