டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் மோதல், இளம்ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி இருந்தன. இந்நிலையில் தற்போது பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்குள் 2 பயணிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தள்ளுமுள்ளு காரணமாக 2 பயணிகளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் சண்டையாக மாறியது. சக பயணிகள் தலையிட்டு மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை சமாதானப்படுத்த முயன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரெயிலுக்குள் அதிக அளவில் உடமைகளை எடுத்து செல்வதால் பயணிகளுக்கு போதிய இருக்கைகள் கிடைப்பதில்லை. இதுவே மோதலுக்கு காரணமாக அமைகிறது. இதற்கு மெட்ரோ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.