இந்தியா

VIDEO: மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் காந்தியுடன் கோட்சே புகைப்படம் வைக்கப்பட்டதால் சர்ச்சை

பூஜை பந்தலில் முக்கிய வரலாற்று ஆளுமைகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை பந்தலில் காந்தியின் புகைப்படம் அருகே அவரை சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதி கோட்சேயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை பந்தலில் காந்தியின் புகைப்படம் அருகே அவரை சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதி கோட்சேயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரசித்தியாக கொண்டாடப்படும் துர்கா பூஜையில் இவ்வாண்டு பல்வேறு இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு விமர்சிக்கயாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதல் முறை பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில் இவ்வாண்டு நடக்கும் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன.

தலைநகர் கொல்கத்தாவில் கடந்த அக்டோபர் 17 அன்று இரவு துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு ஆளும் சுவேந்து அதிகாரியின் பாஜக அரசே காரணம் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

காந்திக்கு அருகில் கோட்சே

பொதுவாகவே மேற்கு வங்கத்தில் உள்ள துர்கா பூஜை பந்தல்கள் பொதுவாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமகால சமூகக் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கலைநயமிக்க வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும்.

இதனிடையே மேற்கு வங்கத்தின் கிழக்கு மெதினிபூர் மாவட்டம், மஹிஷாதலில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் முக்கிய வரலாற்று ஆளுமைகளின் உருவப்படங்களுடன் மகாத்மா காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேயின் உருவப்படமும் காட்சிப்படுத்தப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

'மஹிஷாதல் இளைஞர் கலாச்சார அமைப்பு' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த பந்தலின் புகைப்படங்களும் வீடியோக்களும் நேற்று முதல் வைரலாகி வருகின்றன. அந்த அமைப்பின் 50வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதரவு-எதிர்ப்பு

அந்த பந்தலில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் உருவப்படங்களுக்கு அருகில் கோட்சேயின் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பயங்கரவாதி கோட்சேயை கொண்டாட வழிவகுக்கும் இதுபோன்ற திட்டமிட்ட செயல்களுக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் வன்முறை சிந்தனை கொண்டோர் கோட்சேயை ஆதரித்தும், மகாத்மா காந்தியை தூற்றியும் பதிவிட்டு வருகின்றனர். இது சமூகத்திற்கு ஆபத்தான போக்கு என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

விளக்கம் இல்லை

எதிர்ப்பை அடுத்து, ஏற்பாட்டாளர்கள் கண்காட்சியில் மாற்றங்களை செய்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கோட்சேயின் உருவப்படத்தைச் சேர்த்ததன் நோக்கம் குறித்து அந்த அமைப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த 2022ல், கொல்கத்தாவில் இந்து மகாசபையின் துணை குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜையில், மகாத்மா காந்தியை போன்ற தோற்றமுடைய மஹிஷாசுரனின் சிலை இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT