கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணியை தோற்கடித்து காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வென்றது. இடது முன்னணி வெறும் 35 இடங்கள் மட்டுமே வென்றது.
இந்நிலையில் கேரள கட்சியின் மூத்த தலைவர் செரியன் பிலிப் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏவை கட்சி அலுவலகம் முன் கட்டிப்பிடிக்க முயன்ற காணொளி வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் எம்எல்ஏ வரவேற்பு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணாவை அவர் வரவேற்பது காணப்படுகிறது.
செரியன் அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார், இது பிந்து கிருஷ்ணாவை வெளிப்படையாக சங்கடப்படுத்தியது. அவர் சிரமப்பட்டு அவரை விலக்கிக்கொண்டு நகர்ந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளி வைரலானதை அடுத்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.