இந்தியா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மோடி பதிவு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை கார்த்தை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் பாரம்பரிய முறைப்படி விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணிநேரங்களில், அந்த மலைக்கோயிலின் முதன்மை கடவுளான முருகப்பெருமானை போற்றி பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று குறிப்பிட்டுள்ளார். இதே வாசகம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் பதிவிடப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில், நாளை (நவ. 28) அன்று சடங்கு முறைப்படி விளக்கேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரதமர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் வேதனை:

முன்னதாக திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாதது வேதனை அளிக்கிறது. உத்தரவுகள் மெத்தனமாக கையாளப்படும் பொழுது நாங்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.

திருப்பரங்குன்றம் தீப சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாளாவிட்டால் அது அரசியலமைப்பு சீர்குலைக்க வழிவகுக்கும். உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித்துறை நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறியது.

மேலும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதோடு உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீபத்தை எடுத்துக்கொண்டு போய் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT