இந்தியா

கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றார்

கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சென்னிதலாவும் பதவி ஏற்றுக் கொண்டார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வெற்றி பெற்றது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. பின்னர் ஒரு வழியாக சதீசன் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்தது.

அதனடிப்படையில் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் சென்னிதலா தனக்க உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.