உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரைக்கான பாதைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைப்பகுதியான துங்கநாத் சோப்தா பகுதியில் திடீரென வீசிய கடுமையான புயல் மற்றும் பலத்த காற்றில் சிக்கி, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்தனர்.
சந்திரஷிலா துங்கநாத் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட இருவர் காயமடைந்தனர்.
யமுனோத்ரி தாம் பாதையில் பயணித்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிமோகன் (61) என்ற யாத்ரீகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஆதி கைலாஷ் யாத்திரையின் போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த மன்சுக் கிரி (76) என்ற முதியவர் மாரடைப்பால் காலமானார்.
சாமோலி, உத்தரகாசி, அல்மோரா மற்றும் தெஹ்ரி ஆகிய மலை மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாமோலி பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் பலியாயினர்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த முதிய தம்பதி உயிரிழந்தது.
பௌரி மாவட்டத்தில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தார்.